புதுடெல்லி:-ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் அணிகளுக்கு பல நிறுவனங்கள் விளம்பரம் கொடுப்பது வாடிக்கை. நிறுவனங்களின் விளம்பரங்கள் வீரர்களின் உடையில் அச்சிடப்பட்டிருக்கும். இதன் மூலம் போட்டியை பார்க்கும் பல கோடி மக்களிடம் அந்த விளம்பரங்கள் சென்று சேரும். இந்த நிலையில் டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மேன்கைண்ட் பார்மா என்ற நிறுவனத்தின் மேன்போர்ஸ் காண்டம் பிராண்ட் பஞ்சாப் அணியின் உடையில் விளம்பரம் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்படி மேன்போர்ஸ் காண்டத்தின் படம் அந்த அணி வீரர்களின் உடையின் பின்பகுதியில் இடம்பெறும். பெரும்பாலும் ஐ.பி.எல். போட்டியை இளைஞர்கள் தான் பார்க்கிறார்கள், எனவே அவர்களை குறிவைத்தே இந்த விளம்பரத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் அந்த அணிக்கும் பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அந்த அணியின் பெயர் குறிப்பிட விரும்பாத வீரர் ஒருவர், என்ன சொல்வது என்று தெரியவில்லை. என் குடும்பத்தினர் நான் விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கப்போகிறது. முக்கியமாக என் நண்பர்களின் கிண்டலை எப்படி சமாளிப்பது என்றுதான் தெரியவில்லை என கூறி உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி