ஆண்களே!! பெண்களைப் பற்றிய உங்கள் குறுகிய சிந்தனையை மாற்றிக் கொள்ளுங்கள், அணியும் ஆடை, பார்க்கும் உத்தியோகம், வாழும் வாழ்க்கை இதை வைத்து ஒரு பெண்ணைப் பற்றி தீர்மானிப்பதை நிறுத்துங்கள் என்பதே இந்த குறும்படம் வைக்கும் வேண்டுகோள். தன் நீண்ட கூந்தல் காற்றில் அலைந்தாட குறும்படத்தில் கம்பீர தோற்றமளிக்கும் தீபிகா, எனக்கு பிடித்த மாதிரிதான் நான் உடை அணிய முடியும். என்னுடைய உடல் எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். நான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? நான் ஒரு சாதாரண பெண்ணா? இல்லை லெஸ்பியனா? என்று என் வாழ்க்கை முழுவதும் என்னுடைய சுய தேர்வின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்கிறார்.
தீபிகா படுகோனின் நடிப்பில் ‘காக்டெயில்’, ’பைண்டிங் பேன்னி’ போன்ற படங்களை இயக்கிய ஹோமி அட்ஜானியா, இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார். இதுவரை 2 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். இந்த வீடியோவை கிண்டல் செய்யும் வகையில் வீடியோ, ஸ்டேட்ஸ், ட்வீட் என்று பலரது கடும் விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி