செய்திகள்,திரையுலகம் தி டார்க் லர்க்கிங் (2015) திரை விமர்சனம்…

தி டார்க் லர்க்கிங் (2015) திரை விமர்சனம்…

தி டார்க் லர்க்கிங் (2015) திரை விமர்சனம்… post thumbnail image
ஹாரர் வகை படங்கள் என்றாலே ஹாலிவுட்தான் என்ற வழக்கமான விதிக்கு மாறாக ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருக்கும் படம் ’தி டார்க் லர்க்கிங்’. கிரெக் கானர்ஸ் எழுதி இயக்கியிருக்கும் இந்த படம் வழக்கமான ஹாரர் படங்களுக்கான கதைக்களத்தைக் கொண்டிருந்தாலும் காட்சியமைப்புகள் ஒவ்வொன்றும் இதயம் எகிறிக் குதித்து ஆகி வெளியே வந்து விடுமோ எனும் அளவிற்கு கொடுரமாக அமைந்துள்ளது. நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான 320-ல் திடீரென அடுத்தடுத்து தவறான சம்பவங்கள் அரங்கேறுகிறது.

அனைத்து தொலை தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்படுகிறது. வெளியே செல்வதற்கான வழிகள் அனைத்தும் அடைத்து கொள்கிறது. இருக்கக் கூடிய கொஞ்சம் உணவை வைத்துக் கொண்டு எப்படி வாழப் போகிறோம் என்று யோசிக்கின்றனர். யாரும் வந்து தங்களைக் காப்பாற்றப் போவதில்லை. என்பது அவர்களுக்கு தெரிந்தும், இந்த ஆபத்திலிருந்து வெளியேற அவர்கள் வீடியோ கேம் போல 13 லெவல்களைக் கடந்தால் மட்டுமே இதிலிருந்து வெளியேற முடியும் அவர்கள் கடந்தார்களா என்பதே இல்லையா படத்தின் கதை

படத்தின் பிரதான நாயகி லேனா, உலகிலுள்ள ஒட்டு மொத்த கொடூரத்தின் உச்சகட்டமான உருவமான வில்லன். இவர்கள் இருவரையும் மையமாக கொண்டு நகரும் திரைக்கதையின் பலமே இவர்களின் அதிரடி தான். அதுவும் அந்த கொடூர வில்லனிடம் அச்சமின்றி நாயகி பேசும் வசனங்கள் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கிறது. படத்தின் மற்றொரு பலம் அதி நவீன காட்சியமைப்புகள் அதுவும் கும்மிருட்டில் ப்ளாஷ் லைட் வைத்து எடுக்கப்பட்ட காட்சிகள் உடலில் அட்ரினலினை அதிகம் சுரக்க வைத்து ஏசி திரையரங்கிலும் வேர்க்க வைக்கிறது.

மொத்தத்தில் ‘தி டார்க் லர்க்கிங்’ திகில்………….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி