ஏற்கனவே இரண்டு எம்.பி.க்கள் இதுகுறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில், எனக்கு தெரிந்த ஒருவர் தினமும் ஒரு பாட்டில் மது மற்றும் 60 சிகெரெட்களை புகைக்கிறார், ஆனால் அவர் உயிருடன்தான் உள்ளார் என்று கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் பா.ஜக.வின் மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரான ராம் பிரசாத் சர்மா. இதற்கு முன், அசாமை சேர்ந்த பா.ஜ.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் ராம் பிரசாத் சர்மாவையும் சேர்த்து இதுவரை அக்கட்சியை சேர்ந்த 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் புகையிலை நிறுவனங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளார்கள். இந்த மூன்று பேருமே மத்திய அரசு அமைத்து உள்ள, புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றி ஆராயும் 15 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவில் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குழுவின் தலைவர் தீலிப் காந்தி புகைபிடிப்பது புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பதற்கு உள்ளூரில் போதிய ஆதாரம் இல்லை என தெரிவித்திருந்தார்.
மற்றொரு உறுப்பினர் சரண் குப்தா சர்க்கரைதான் நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது. எனவே சர்க்கரையை தடை செய்ய முடியுமா? என கேள்வி எழுப்பினார். இவர் 100 கோடி மதிப்பிலான பீடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.அக்குழுவின் மற்றொரு உறுப்பினரான ராம் குமார் சர்மா நாடு முழுவதும் கள்ளத்தனமாக வெளிநாட்டு சிகெரெட்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் நாம் நாட்டில் தயாராகும் சிகெரெட் பெட்டிகள் முழுவதும் விழிப்புணர்வு விளம்பரங்களை அச்சடித்தால் அதை யார் வாங்குவார்கள் என கூறி பலரின் கண்டனத்திற்கு உள்ளானார். ஏப்ரல் 1 முதல் சிகெரெட் பெட்டிகளில் 85 சதவிதம் விழிப்புணர்வு விளம்பரங்களை அச்சடிக்க வேண்டும் என கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டிருந்து. இதை ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட இக்குழு, தங்களுக்கு அதுபற்றி முடிவெடுக்க இன்னும் அதிக காலம் தேவை என கூறி புகையிலை நிறுவனங்களுக்கு ஆதரவாக முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி