இதுபற்றி ஆளுநர் ஜெர்ரி புரவுன் கூறுகையில், நாம் 5 அடி பனிக்குமேல் நிற்பதற்கு பதிலாக வெறும் தரை மீது நின்றுகொண்டிருக்கிறோம். இது மிகவும் ஆபத்தான அறிகுறி. கடுமையான பல சட்டங்கள் மூலம் இதை தடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்து உள்ளார். இந்த புதிய அறிவிப்பின்படி, கோல்ப் மைதானங்கள், அலங்கார புல்வெளிகள், தொழில் பூங்கா, கல்லறைகள் போன்றவைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த நீரின் அளவில் 25 சதவிதம் குறைக்கப்பட்டு உள்ளது.
இதை அமல்படுத்தாதவர்கள் மீது 10 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு அளிக்கப்படும் நீரின் அளவு ஏற்கனவே கடுமையாக குறைக்கப்பட்டுள்ளதால் இந்த கட்டுப்பாடுகள் அவர்களுக்கு பொருந்தாது. அமெரிக்கா தன்னுடைய கட்டுப்பாடு இல்லாத பொருளாதார வளர்ச்சிக்கான விலையை கொடுக்க ஆரம்பித்திருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி உள்ளார்கள். எப்பாடுபட்டாவது இந்தியாவையும் அமெரிக்கா போல மாற்ற துடிக்கும் ஆட்சியாளர்கள் இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி