சமூக சேவைகளில் நாட்டம் உள்ள நயன்தாராவை எப்படியாவது தன் பக்கம் ஈர்க்கவேண்டும் என்பதற்காக அவளுக்கு பிடித்ததுபோல், உதயநிதியும் சமூக சேவைகளில் ஈடுபட தொடங்குகிறார். அதில் நயன்தாராவையும் கவர்கிறார்.ருவழியாக நயன்தாரவுக்கும் உதயநிதிமேல் காதல் வர, அவரிடம் தன் காதலைச் சொல்லும்முன் தன் கடந்த கால வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றை உதயநிதியிடம் சொல்கிறார். அதற்கு உதயநிதி தரும் ரியாக்ஷனால் நயன்தாராவுக்கு கோபம் வர, அவர்களின் காதல் அங்கேயே முறிந்து போகிறது. ஏன், எதற்கு என்பதை ‘நண்பேன்டா’ பின் பகுதி கதை…….
வேலை வெட்டியில்லாமல் சுற்றும் ஹீரோ, அவரின் காதல், காதலுக்கு உதவும் நண்பன், படம் முழுக்க வசனங்கள் பேசிக் கொண்டேயிருப்பது என தன் குருவான இயக்குனர் எம்.ராஜேஷின் ஃபார்முலாவை அட்சரம் பிசகாமல் ‘நண்பேன்டா’வில் வழிமொழிந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெகதீஷ். அதுமட்டுமில்லாமல் உதயநிதியின் அறிமுகப்படமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’யின் கதையில் லேசாக சில மாற்றங்களை மட்டும் செய்து அப்படியே அதை ‘நண்பேன்டா’வாகவும் மாற்றிவிட்டார்கள்.தொடர்ந்து 3 படங்களாக சந்தானமும் ஒரே வேலையை செய்து கொண்டிருப்பதாலோ என்னவோ, அவரின் காமெடியும் ரசிகர்களிடம் பெரிதாக எடுபடவில்லை. எந்த சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் இல்லாமல் நகரும் படத்தில் ஆங்காங்கே வரும் அழகான பாடல்கள் மட்டுமே கொஞ்சம் ஆறுதல். படத்தின் ஒரே பலம் பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு மட்டுமே. மற்றபடி இந்த ‘நண்பேன்டா’வில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக எதுவும் இல்லை.
உதயநிதியின் நடிப்பில் மெச்சூரிட்டி அதிகரித்திருக்கிறது. நன்றாக நடனம் ஆடவும் கற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால் தொடர்ந்து 3 படங்களிலும் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தை தேர்வு செய்ததை அவர் தவிர்த்திருக்கலாம். நயன்தாராவுக்கும் இப்படத்தில் சொல்லிக் கொள்ளும்படியான கேரக்டர் கொடுக்கப்படவில்லை. அழகழகான எக்ஸ்பிரஷன்ஸ் காட்டுவது, ஹீரோவை முறைப்பது, திட்டுவது என ‘இது கதிர்வேலன் காதலி’ல் செய்த அதே வேலைத்தான் இப்படத்திலும் செய்திருக்கிறார். ஆனால், பாடல்களில் அவரின் உடையலங்காரமும், அழகான நடனமும் ரசிகர்களை வசீகரித்திருக்கிறது. சந்தானத்தை திரையில் காட்டியதும் மொத்த திரையரங்கமும் அதிர்ந்தது. ஆனால் அதன்பிறகு எந்த சிரிப்பு சத்தமும் எழவில்லை. அவரின் காமெடி காட்சிகளை இயக்குனர் சரியாக கையாளவில்லை. இருந்தாலும் ஆங்காங்கே ஒன்றிரண்டு இடங்களில் தன்னால் முடிந்தளவுக்கு ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார் சந்தானம். மிகப்பெரிய வில்லிபோல் காட்டப்பட்ட சூசன், வில்லன் ராஜேந்திரன் ஆகியோரை டம்மியாக்கியிருக்கிறார்கள்.
மொத்தத்தில் ‘நண்பேன்டா’ காதல்………….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி