செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் ஏமன் பால் பண்ணை மீது குண்டு வீச்சு: 37 பேர் பலி!…

ஏமன் பால் பண்ணை மீது குண்டு வீச்சு: 37 பேர் பலி!…

ஏமன் பால் பண்ணை மீது குண்டு வீச்சு: 37 பேர் பலி!… post thumbnail image
சனா:-ஏமன் நாட்டின் தலைநகரான சனா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதால் அந்நாட்டில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதனால் அதிபர் அப்ட் ரப்பு மன்சூர் ஹாதி, தலைநகர் சனாவிலிருந்து தலைமறைவானார். கிளர்ச்சியாளர்களை ஒடுக்க உதவுமாறு சவுதி அரேபியாவிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். ஹாதியின் வேண்டுகோளை ஏற்று ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா தலைமையிலான அரேபிய கூட்டுப்படைகள் கடந்த வியாழக்கிழமை வான்வழி தாக்குதலை தொடங்கியது. இதில் கிளர்ச்சியாளர்கள் பலர் கொல்லப்பட்டதுடன், அவர்களின் முகாம்கள் குண்டுவீச்சில் அழிக்கப்பட்டன.

ஏழாவது நாளாக இன்று தொடர்ந்த சவுதி தலைமையிலான விமானப்படை தாக்குதலில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்த ஆயுத கிடங்குகள் தரைமட்டமாக்கப்பட்டன. ஏடன் துறைமுகம் பகுதியில் முதன்முறையாக நேற்று கப்பல்படை மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கிடையில், மேற்கு ஏமனில் உள்ள ஹொடைடா மாகாணத்தில் உள்ள ஒரு பால் பண்ணை மீது நேற்றிரவு குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 37 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 80-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் ஹொடைடா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமென அஞ்சப்படுகின்றது.

இந்த தாக்குதலை நடத்தியது யார்?… என்பது தொடர்பான கருத்துகளில் குழப்பம் நிலவி வருகின்றது. சவுதி தலைமையிலான விமானப்படை தாக்குதல் மூலமாகவே இந்த குண்டுவீச்சு நடைபெற்றதாக ஒரு தரப்பினரும், ஹவுத்தி போராளிகளின் தாக்குதல் தான் காரணம் என்று மற்றொரு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி