சிட்னி:-சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், ஒரு கேப்டனாக இந்திய கேப்டன் தோனி 6 ஆயிரம் ரன்களை நேற்று கடந்தார். நேற்றைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இவர் இந்த இலக்கை கடந்த 3-வது கேப்டன் ஆவார்.
அவர் இதுவரை 178 ஆட்டங்களுக்கு கேப்டனாக செயல்பட்டு 6,022 ரன்கள் எடுத்துள்ளார். இந்த வகையில் தோனியை விட ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் (8,497 ரன்), நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளமிங் (6,295 ரன்) ஆகியோர் முன்னிலையில் இருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி