சென்னை:-நடிகர் விஜய் நீண்ட இடைவேளைக்கு பிறகு புலி படத்தின் மூலம் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் இணைந்துள்ளார். இவர்கள் கூட்டணியில் இதற்கு முன் வெளிவந்த சச்சின், வில்லு ஆகிய படங்களின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
தற்போது இப்படத்தின் பாடல் உரிமையை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. விஜய்யின் கத்தி படத்தின் பாடல்களை ஈராஸ் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது. பலத்த போட்டிகளுக்கிடையே தான் இந்த வாய்ப்பு சோனி நிறுவனத்திற்கு கிடைத்ததாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி