புதுடெல்லி:-இந்தியா வந்துள்ள கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல்-தானி டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது, இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே கைதிகள் மாற்றம், தகவல் தொழில்நுட்ப துறையில் ஒத்துழைப்பு, செய்தி பரிமாற்றம் உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. கைதிகள் மாற்றம் ஒப்பந்தத்தின் கீழ் கத்தாரில் தண்டளை விதிக்கப்பட்ட இந்தியர்களும், இந்தியாவில் தண்டனை பெற்ற கத்தார் நாட்டினரும் அவரவர் நாடுகளுக்கு அனுப்பப்பட்டு மீதியுள்ள தண்டனை காலத்தை தங்கள் நாட்டில் அனுபவிப்பார்கள். செய்தி பரிமாற்ற ஒப்பந்தம் இந்தியாவின் யு.என்.ஐ. செய்தி நிறுவனமும், கத்தார் நாட்டின் கத்தார் செய்தி முகமையும் (கியூ.என்.ஏ.) பரஸ்பரம் செய்திகளை பரிமாறிக் கொள்வதில் ஒத்துழைப்பை மேம்படுத்த வகை செய்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி