இதையடுத்து 329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஷிகர் தவான்-ரோகித் சர்மா இருவரும் 10 ஓவர்கள் வரை நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். இந்த ஜோடியை ஹாசில்வுட் பிரித்தார். அவர் வீசிய 13-வது ஓவரில் தவான் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். சேசிங்கை சிறப்பாக எதிர்கொண்டு இந்தியாவின் வெற்றியை உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோலியை ஒரு ரன்னில் வெளியேற்றினார் ஜான்சன். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் ஜான்சனின் துல்லிய பந்துவீச்சில் ரோகித் சர்மா போல்டாகி வெளியேறினார். அவர் மொத்தம் 48 பந்துகளை சந்தித்து 34 ரன்கள் சேர்த்தார். அதிரடி பேட்ஸ்மேன் ரெய்னாவும் (7) தாக்குப்பிடிக்கவில்லை. 108 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணிக்கு கேப்டன் தோனி-ரகானே ஜோடி ஆறுதல் அளித்தது.
ரகானே 44 ரன்களிலும், ஜடேஜா 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 55 பந்துகளில் அரை சதம் கடந்த டோனி, துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். டோனி 65 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார். அஷ்வின் (5), மோகித் சர்மா (0), உமேஷ் யாதவ் (0) ஆகியோரும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப, இந்திய அணி 233 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதனால், ஆஸ்திரேலிய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி