மும்பை:-போட்டியும், பொறாமையும் நிறைந்த உலகம் திரையுலகம் என்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற திரையுலகங்களை விட ஹிந்தித் திரையுலகில் போட்டி, பொறாமை அதிகமாகவே இருக்கும். நடிகைகளுக்குள் நட்பு என்பது இருக்கவே இருக்காது என்றும் சொல்வார்கள். ஆனாலும், இந்தக் காலத்தில் அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. ஒரு சில நடிகைகள் தற்போது நட்பாகப் பழகி வருகிறார்கள்.
சமீபத்தில் அனுஷ்கா ஷர்மாவை, தீபிகா படுகோனே முத்தமிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தி நடிகைகளுக்குள்ளும் நட்பு இருக்கிறது என்று ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். சமீபத்தில் சென்சார் பற்றிய கூட்டம் ஒன்றில் அவர்களிருவரும் சந்தித்துக் கொண்டார்களாம். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் தீபிகா, அனுஷ்காவைக் கட்டிப் பிடித்து கன்னத்தில் அழுத்தமான முத்தம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் இரண்டு ஹீரோயின்கள் ஒருவருக்கொருவர் இப்படி பாசமழை பொழிந்திருப்பதுதான் மும்பை திரையுலக வட்டாரங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி