கியூபா:-கியூபா நாட்டில் உள்ள ஒரு அரசு முட்டை நிறுவனத்தில் பணியாற்றி வரும் 19 ஊழியர்கள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அரசு முட்டை நிறுவனத்தில் பணியாற்றி வந்தபோது சுமார் 80 லட்சம் முட்டைகளை திருடி கள்ள சந்தையில் விற்றதாக புகார் எழுந்துள்ளது. திருடப்பட்ட முட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி ஆகும்.
இதையடுத்து மோசடி, கையாடல், வங்கியில் பொய் கையெழுத்து, வணிக போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற பல்வேறு குற்றப்பிரிவுகளில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இவர்களுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி