அமிர்தசரஸ்:-சுதந்திர போராட்டத்தின் போது, பஞ்சாப் மாநிலம் ஜாலியன்வாலாபாக் என்ற இடத்தில் நிராயுதபாணிகளாக இருந்த விடுதலைப்போராட்ட வீரர்கள் ஏராளமான பேரை ஆங்கிலேய ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக்கொன்றனர். அந்த வளாகம் தற்போது நினைவிடமாக விளங்குகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி, பின்னர் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்துக்கு சென்று, தேச விடுதலைக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். நினைவிடத்தையும் சுற்றிப்பார்த்தார். அங்கு அவர் 20 நிமிடங்கள் இருந்தார். பிரதமருடன் பஞ்சாப் கவர்னர் கப்தான் சிங் சோலங்கி, முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல், மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர், மாநில பா.ஜனதா தலைவர் கமல் சர்மா ஆகியோரும் சென்று இருந்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி