சுனந்தாவின் மரணம் குறித்து சசிதரூரிடம் டெல்லி போலீசார் ஏற்கனவே 3 தடவை விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, கொச்சி கிரிக்கெட் அணியின் பங்குகள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. மேலும், சுனந்தாவின் 2 லேப்-டாப்புகள், 4 செல்போன்கள் ஆகியவற்றில் உள்ள விவரங்களை அறிவதற்காக, அவற்றை குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தடய அறிவியல் இயக்குநகரத்துக்கு டெல்லி போலீசார் கடந்த ஜனவரி மாதம் அனுப்பி வைத்திருந்தனர். அவற்றில் உள்ள தகவல்களை எடுத்து ஆய்வு செய்த தடயவியல் அதிகாரிகள், அதுகுறித்த விரிவான அறிக்கையுடன் அப்பொருட்களை டெல்லி போலீசாருக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து, டெல்லி போலீசாரின் விசாரணையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தடயவியல் ஆய்வு அறிக்கையை டெல்லி போலீசார் தற்போது ஆய்வு செய்து வருகிறார்கள். அதில், சந்தேகத்துக்குரிய தகவல்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட நபர்களிடம் விளக்கம் கேட்போம் என்று டெல்லி நகர போலீஸ் கமிஷனர் பஸ்சி நேற்று தெரிவித்தார். லேப்-டாப் மற்றும் செல்போனில் உள்ள விவரங்கள் ஏதேனும் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார். இதையடுத்து, சுனந்தாவின் வலைத்தள கணக்குகளையும், அவற்றில் அவருடன் தொடர்பு வைத்திருந்த நபர்கள் பற்றியும் விவரங்களை அளிக்குமாறு பேஸ்புக், டுவிட்டர், பிளாக்பெர்ரி ஆகிய நிறுவனங்களை மீண்டும் கேட்டுக்கொள்வோம் என்றும் பஸ்சி கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி