செய்திகள்,திரையுலகம் கள்ளப்படம் (2015) திரை விமர்சனம்…

கள்ளப்படம் (2015) திரை விமர்சனம்…

கள்ளப்படம் (2015) திரை விமர்சனம்… post thumbnail image
சினிமாவில் நவீனம் தலைதூக்கவே தன்னுடைய பாரம்பரிய கூத்துக்கலையை தொடர முடியாமல் தற்கொலை செய்துகொண்ட தன் தந்தையின் கதையை முதல் திரைப்படமாக எடுக்க விரும்புகிறார் வடிவேல். அதேபோல், சினிமாவில் இசையமைப்பாளராக வர விரும்பும் கே, ஒளிப்பதிவாளராக வர விரும்பும் ஸ்ரீராம் சந்தோஷ், படத்தொகுப்பாளராக வர விரும்பும் காகின் ஆகியோரும் வடிவேலுவின் கனவை நனவாக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால், கூத்துக் கலைஞனின் வாழ்க்கை கதையை படமாக்க எந்த தயாரிப்பாளரும் முன்வருவதில்லை. இவர்களைப் போலவே சினிமாவில் இயக்குனராக ஆசைப்பட்டு காத்திருக்கும் சிங்கம்புலி, பிரபல தயாரிப்பாளரான நரேனை சந்தித்து கதை சொல்லும்படி வடிவேலுவை அனுப்பி வைக்கிறார்.

அவரிடம் செல்லும் வடிவேலு, தனது கதையை சொல்கிறார். அதை ஒழுங்காக கேட்காமல் அலட்சியப்படுத்துகிறார் நரேன். இதனால் மிகுந்த விரக்தியடையும் வடிவேல், தன் நண்பர்களுடன் சேர்ந்து நரேன் வீட்டிலுள்ள கறுப்பு பணத்தை கொள்ளையடித்து, அந்த பணத்தில் படம் எடுக்க முடிவு செய்கிறார். ஆனால், முதலில் இதற்கு அவரது நண்பர்கள் மறுப்பு தெரிவித்தாலும், பின்பு ஒருவழியாக அவர்களை சரிக்கட்டி விடுகிறார் வடிவேல்.இதேபோல், பிரபல சினிமா நட்சத்திரமாக வலம்வந்து பின்னர் மார்க்கெட் இல்லாமல் நொடிந்து போய், தயாரிப்பாளர் நரேனுக்கு ஆசைநாயகியாக இருக்கும் லட்சுமி பிரியா, தனது கைச்செலவுக்குக்கூட காசு தராமல் அலட்சியம் செய்யும் நரேனை பழிவாங்க தனது இளம்காதலனுடன் சேர்ந்து நரேனிடம் இருக்கும் பணத்தை கொள்ளையடித்து செட்டிலாக நினைக்கிறார். இருவரும் ஒரேநாளில் அந்த பணத்தை கொள்ளையடிக்க களமிறங்குகிறார்கள். இறுதியில், வடிவேல் கும்பல் நரேனின் பணத்தை கொள்ளையடித்ததா? லட்சுமி பிரியா கொள்ளையடித்தாரா? என்பதை பல்வேறு சுவாரஸ்யங்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.

இப்படத்தின் இயக்குனர் வடிவேல், ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம சந்தோஷ், இசையமைப்பாளர் கே, படத்தொகுப்பாளர் காகின் ஆகியோர் படத்திலும் அதேபோல் வரத்துடிப்பவர்களாக நடித்திருக்கிறார்கள். அனைவரும் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவுக்கு புது முயற்சியை அழகாக கையாண்டிருக்கிறார்கள்.படத்தில் நாயகியான லட்சுமி பிரியா, புகழ் மங்கிய நட்சத்திரமாக அழகாக நடித்திருக்கிறார். தன்னுடைய காரியம் நடக்கவேண்டும் என்பதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தன்னை விருந்தாக்குவது போன்ற காட்சியில் ரொம்பவும் துணிச்சலாக நடித்து கைதட்டல் பெறுகிறார். அதேபோல், எந்நேரமும் லிப்ஸ்டிக்கும் கையுமாக இவர் வரும் காட்சிகள் நடிகைகளின் மனநிலையை துல்லியமாக படம்பிடித்து காட்டியிருக்கிறது.கதையில் கவனம் செலுத்திய இயக்குனர் வடிவேல் திரைக்கதையில் கோட்டைவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். நல்ல படம் எடுக்க ஆசைப்பட்டு, தயாரிப்பாளர் கிடைக்காமல் தவிக்கும் உதவி இயக்குனர்கள், தயாரிப்பாளரின் பணத்தையே திருடி படம் எடுக்கலாம் என்று சொல்ல வந்திருப்பது சற்று நெருடலாக இருக்கிறது. மற்றபடி, படத்தில் கே இசையில் அமைந்துள்ள ‘வெள்ளக்கார ராணி’ பாடல் ஏற்கெனவே ஹிட்டாகியிருந்தாலும், பெரிய திரையில் பார்க்க ரொம்பவும் அழகாகவே இருக்கிறது. பின்னணி இசையிலும் தனது வழக்கமான பாணியை கையாண்டிருக்கிறார். ஸ்ரீராமசந்தோஷ் ஒளிப்பதிவில் காட்சிகள் எல்லாம் தெளிவாக இருக்கிறது.

மொத்தத்தில் ‘கள்ளப்படம்’ களவாடும்………….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி