செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு தோனி தலைமையில் 100 போட்டிகளில் வென்று இந்தியா சாதனை!…

தோனி தலைமையில் 100 போட்டிகளில் வென்று இந்தியா சாதனை!…

தோனி தலைமையில் 100 போட்டிகளில் வென்று இந்தியா சாதனை!… post thumbnail image
மெல்போர்ன்:-உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மெல்போர்னில் நடந்த வங்காள தேசத்திற்கு எதிரான காலிறுதி போட்டியில் இந்தியா 109 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. தோனி கேப்டன் பதவி ஏற்று பெறும் 100-வது வெற்றி இதுவாகும். இதுவரை இந்திய அணிக்கு 138 போட்டிகளில் கேப்டனாக பணியாற்றியுள்ளார் தோனி.

அவரது தலைமையிலான அணி 100 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 35 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி டையிலும், 3 போட்டிகள் முடிவு இல்லாமலும் இருந்துள்ளது.
இதுதவிர, தோனி தலைமையில் இந்தியா இருபது ஓவர் உலக்கோப்பை மற்றும் 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்திய அணியின் வெற்றி கேப்டனாக தோனி திகழ்ந்து வருகிறார். ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 165 போட்டியிலும், ஆலன் பார்டர் தலைமையில் அதே அணி 107 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி