செய்திகள்,திரையுலகம் ‘தல’ அஜித் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய அனிருத்!…

‘தல’ அஜித் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய அனிருத்!…

‘தல’ அஜித் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய அனிருத்!… post thumbnail image
சென்னை:-‘தல’ அஜித் படம் வருகிறது என்றாலே அனைவருக்கும் செம விருந்து தான். அதுவும் அஜித்தின் அடுத்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரிதும் உள்ளது. என்னை அறிந்தால் படத்தையடுத்து தற்போது அஜித் நடிக்கும் 56வது படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் பரவி வந்தது. தற்போது அதை தனது முகப்புத்தகத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் அனிருத்.

சிவா இயக்கும் இப்படத்தை ஏ.எம் ரத்னம் தயாரிக்க உள்ளார். கடந்த சில வருடங்களில் அனிருத் இசையமைத்த பல பாடல்கள் சூப்பர்ஹிட் என்பதால் அஜித் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி