சமீபத்தில் அவரது உடல் நிலை கவலைக்கிடமானது. பின்னர் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு அவர் மரணம் அடைந்து விட்டதாக செய்தி வெளியானது. அந்த செய்தியை சிங்கப்பூரில் இயங்கும் ஒரு இணைய தளம் வெளியிட்டது. அதை பின்பற்றி வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.
ஆனால், இதை சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் மறுத்தது. முன்னாள் பிரதமர் லீ மரணம் அடையவில்லை என செய்தி வெளியிட்டது. மேலும் இந்த வதந்தி பரப்பியவர்கள் யார் என கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி போலீசுக்கு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வதந்தியை பொதுமக்களிடம் பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி