சமி வீசிய 4-வது ஓவரில் தமீம் இக்பால் 3 பவுண்டரி அடித்தார். 7-வது ஓவரை யாதவ் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் தமீம் இக்பால் கேட்ச் ஆனார். அடுத்து சர்கார் களம் இறங்கினார். இவர் பந்தை அடித்தார். அந்த பந்து நேராக ஜடேஜா பக்கம் வந்தது. அதற்கு எதிர்முனையில் உள்ள கயாஸ் பாதி தூரம் ஓடி வந்தார். அவர் திரும்புவதற்குள் ஜடேஜா வீசிய பந்தை யாதவ் பிடித்து அருமையாக ரன் அவுட் செய்தார்.3-வது விக்கெட்டுக்கு சர்கார் உடன் மகமெதுல்லா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு நிலைத்து நின்று ஆடியது. சமி வீசிய 17-வது ஓவரின் கடைசி பந்தில் மகமெதுல்லா 21 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரது கேட்ச்சை தவான் சிறப்பாக பிடித்தார். சமி வீசிய 21-வது ஓவரில் சர்க்கார் 29 ரன்கள் எடுத்த நிலையில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதனால் வங்காள தேசம் 24 ஓவரில் 91 ரன்களுக்குள் 4 முக்கிய விக்கெட்டுக்களை இழந்தது. அதன்பின் வங்காள தேச வீரர்களால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. ஷாகிப் அல் ஹசன் 10 ரன்கள், ரஹிம் 27 ரன்கள், நசீர் ஹுசைன் 35 ரன்கள், சபீர் ரக்மான் 30 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். இதனால் வங்காள தேசம் 45 ஓவரில் 193 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா 110 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். முகமது சமி மற்றும் ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். 137 ரன்கள் குவித்த ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி