வாஷிங்டன்:-இந்தியாவை சேர்ந்த 700 பேருக்கு அமெரிக்கா அரசியல் தஞ்சம் அளித்திருப்பதாக அந்நாட்டின் தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. கலிபோர்னியாவில் செயல்படும் பஞ்சாப்- அமெரிக்கர்கள் அமைப்பு ஒன்று இந்த தகவலை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் பெற்றவர்கள் 2013-ம் ஆண்டில் 419-ஆக இருந்தது என்றும் அதுவே 2014-ல் 700-ஆக அதிகரித்துள்ளது என்றும் அந்த அமைப்பை சேர்ந்தவர் தெரிவித்தார்.
இதில் அமெரிக்காவின் நீதி அமைப்பு மூலம் அரசியல் தஞ்சம் பெற்றவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் பெறுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தபடியே உள்ளது கவலை தரும் விஷயம் என்றும் அந்த அமைப்பின் தலைவர் சாத்னம் சிங் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி