சென்னை:-ஆண்டுதோறும் சிறந்த தமிழ் படங்களுக்கா நார்வே விருதுகள் வழங்கப்படுகிறது. 2014-ம் ஆண்டு வெளியான சிறந்த படங்களுக்கான 6-வது நார்வே திரைப்பட விழா விருதுகளுக்கு தேர்வானவர்கள் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், வசந்தபாலன் இயக்கத்தில் உருவான ‘காவியத்தலைவன்’ படம் வெவ்வெறு பிரிவுகளில் 5 விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது. சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த பாடகர் ஆகிய பிரிவுகளுக்கு இப்படம் தேர்வாகியுள்ளது. மேலும் சிறந்த படமாக ‘குக்கூ’ படம் தேர்வாகியுள்ளது. சிறந்த இசையமைப்பாளாராக ‘குக்கூ’, ‘ஜிகர்தண்டா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்ததற்காக சந்தோஷ் நாராயணன் தேர்வாகியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி