சென்னை:-புதிய வார்ப்புகள், முரட்டுக்காளை, உல்லாசப் பறவைகள், ஏக் துஜே கே லியே உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ரதி அக்னிஹோத்ரி தனது கணவர் மீது குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பிரபல கட்டிட வடிவமைப்பாளர் அனில் விர்வானி என்பவரை கடந்த 1985-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ரதி, தெற்கு மும்பையில் உள்ள கணவரின் வீட்டில் வசித்து வருகிறார். சமீப காலமாக கணவர் தன்னை அடித்து, உதைத்து, உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தி வருவதாக மும்பை போலீசில் அவர் புகார் அளித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி