புதுடெல்லி:-இந்திய பொருளாதாரத்தை உலகின் முதன்மையானதாக மாற்ற முடியும். அதற்கான மிக சரியான நேரம் இதுதான் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் தெரிவித்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் ரகுமராம் ராஜன் மற்றும் பிரதமர் மோடி இருவரும் இந்தியாவை வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்வதாகவும் பாராட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, இந்தியாவின் தொழிலாளர்கள் சட்டங்களில் மாற்றம் தேவை. அதேபோல் இந்திய பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு மிகவும் குறைவாக உள்ளது. அதை அதிகரிக்க வேண்டும். நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை நீக்கி, பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமான வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என்று கூறினார். இதே திசையில் இந்திய பொருளாதாரம் சென்றால் வருங்காலத்தில் அதன் வளர்ச்சி மற்றும் நிலை தன்மை வலுவாக இருக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி