செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ரெய்னா, தோனி அதிரடியில் இந்தியா வெற்றி!…

ரெய்னா, தோனி அதிரடியில் இந்தியா வெற்றி!…

ரெய்னா, தோனி அதிரடியில் இந்தியா வெற்றி!… post thumbnail image
ஆக்லாந்து:-இந்தியாவிற்கு எதிராக ஜிம்பாப்வே 287 ரன்கள் குவித்தது. இதனால் 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக தவானும், ரோகித் சர்மாவும் களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் ரோகித் சர்மா இரண்டு பவுண்டரிகள் விரட்டினார். இதனால் அந்த ஓவரில் இந்தியாவிற்கு 9 ரன்கள் கிடைத்தது. 2-வது ஓவரை சத்தரா வீசினார். இந்த ஓவரில் தவான் ரன் ஏதும் அடிக்கவில்லை. 4-வது ஓவரில் தவான் ஒரு பவுண்டரி அடித்தார். 7-வது ஓவரை பன்யங்கரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை ரோகித் சர்மா தூக்கி அடித்தார். ஆனால், பந்து எட்ஜ் ஆகி சிக்கந்தரிடம் கேட்ச் ஆக மாறியது. இதே ஓவரின் 5-வது பந்தில் தவான் கிளீன் போல்டானார். ரோகித் 16 ரன்னும், தவான் 4 ரன்னும் எடுத்தனர்.

3-வது விக்கெட்டுக்கு கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினார்கள். இருந்தாலும் 19 ரன்கள் எடுத்திருந்த ரகானே 17-வது ஓவரின் 3-வது பந்தில் ரன் அவுட் ஆனார். அப்போது இந்தியா 16.3 ஓவரில் 71 ரன்கள் எடுத்திருந்தது.அதன்பின் கோலியுடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இந்த இருவரும் நிதானமாக விளையாடி வந்தனர். 23-வது ஓவரில் கோலி 38 ரன்கள் எடுத்த நிலையில் சிக்கந்தர் பந்தில் போல்டானார். அப்போது இந்தியா 92 ரன்கள் எடுத்திருந்தது.அடுத்து ரெய்னாவுடன் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து சிறப்பாக விளையாடினார்கள். வில்லியம்ஸ் வீசிய 30-வது ஓவரில் ரெய்னா இமாலய சிக்சர் விளாசினார். மியர் வீசிய 32-வது ஓவரில் தோனி இரண்டு பவுண்டரி விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.34-வது ஓவரின் 2-வது பந்தில் இந்தியா 150 ரன்னைத் தொட்டது. 35-வது ஓவரை சிக்கந்தர் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் ரெய்னா அடித்த பந்தை ஜிம்பாப்வே வீரர் மசகட்சா பிடிக்க தவறினார்.

இதை நன்றாக பயன்படுத்திய ரெய்னா 37-வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து அரை சதம் அடித்தார். அதன்பின் ரெய்னா வாணவெடிக்கை நிகழ்த்தினார். 40-வது ஓவரின் முதல் பந்தில் ஒரு சிக்சர் விரட்டினார். 42-வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி துரத்தினார். மறுமுனையில் விளையாடிய தோனி தனது 57-வது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.சிறப்பாக விளையாடிய ரெய்னா 45-வது ஓவரின் 2-வது பந்தில் ஒரு ரன் எடுத்து உலகக்கோப்பையில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
இந்தியாவிற்கு கடைசி 5 ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டது. 46-வது ஓவரில் ரெய்னா ஒரு பவுண்டரி அடிக்க இந்தியாவிற்கு 7 ரன்கள் கிடைத்தது. 47-வது ஓவரில் ரெய்னா கொடுத்த கேட்ச்சை ஜிம்பாப்வே வீரர் தவற விட்டார். இந்த ஓவரின் 4-வது பந்தில் தோனி சிக்சர் விளாசினார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு துரத்தினார். இதனால் 47-வது ஓவரில் இந்தியாவிற்கு 17 ரன்கள் கிடைத்தது. இதனால் கடைசி 18 பந்தில் 17 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. 48-வது ஓவரில் இரண்டு ஒய்டு உடன் 8 ரன்கள் கிடைத்தது. கடைசி 12 பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் 4-வது பந்தில் தோனி சிக்சர் அடித்த இந்தியாவை வெற்றி பெற செய்தார். இந்தியா 48.4 ஓவரில் 289 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ரெய்னா 110 ரன்களுடனும், தோனி 85 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் லீக் சுற்றை இந்தியா 6-0 என வெற்றிகரமாக முடித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி