செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலக கோப்பை: சாதனை துளிகள் – ஒரு பார்வை…

உலக கோப்பை: சாதனை துளிகள் – ஒரு பார்வை…

உலக கோப்பை: சாதனை துளிகள் – ஒரு பார்வை… post thumbnail image
* நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் 37 ரன்கள் எடுத்த போது ஒரு நாள் போட்டியில் 5ஆயிரம் ரன்களை கடந்த 4-வது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார். அவர் இதுவரை 144 இன்னிங்ஸ்களில் விளையாடி 12 சதம் உள்பட 5,022 ரன்கள் சேர்த்துள்ளார்.

ஸ்டீபன் பிளமிங் (8,007 ரன்), நாதன் ஆஸ்டில் (7,090 ரன்), பிரன்டன் மெக்கல்லம்(5,737 ரன்) ஆகியோர் இந்த மைல்கல்லை கடந்த முதல் மூன்று நியூசிலாந்து நாட்டவர் ஆவர். ஆனாலும் இவர்களில் 5 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்தவர் ராஸ் டெய்லர் தான்.

* வங்காளதேச வீரர் 29 வயதான மக்முதுல்லா முந்தைய இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சதம் (103 ரன்) விளாசி உலக கோப்பையில் சதம் அடித்த முதல் வங்காளதேச வீரர் என்ற சாதனையை படைத்தார். அதன் தொடர்ச்சியாக நேற்றைய ஆட்டத்திலும் 128 ரன்கள் குவித்து சதத்தை ருசித்தார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் அடுத்தடுத்து இரண்டு சதங்கள் அடித்த 2-வது வங்காளதேச வீரர் மக்முதுல்லா ஆவார். இதற்கு முன்பு 2006-ம் ஆண்டு சகாரியார் நபீஸ் ஜிம்பாப்வேக்கு எதிராக (123 ரன், 105 ரன்) இவ்வாறு சதம் கண்டிருந்தார்.

* உலக கோப்பை கிரிக்கெட்டில் அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் சதம் அடித்த வீரர்களின் வரிசையில் 8-வது வீரராக மக்முதுல்லா இணைந்துள்ளார். ஏற்கனவே சங்கக்கரா (இலங்கை), மார்க் வாக் (ஆஸ்திரேலியா), ராகுல் டிராவிட் (இந்தியா), டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா), மேத்யூ ஹைடன் (ஆஸ்திரேலியா), ரிக்கிபாண்டிங் (ஆஸ்திரேலியா), சயீத் அன்வர் (பாகிஸ்தான்) ஆகியோர் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்துள்ளனர்.

* வங்காளதேசத்தின் தொடக்க ஓவர்களை இடக்கை சுழற்பந்து வீச்சாளர்கள் ஷகிப் அல்-ஹசனும், தைய்ஜூல் இஸ்லாமும் வீசினர். ஒரு நாள் கிரிக்கெட்டில் இரு இடக்கை சுழற்பந்து வீச்சாளர்களுடன் பந்து வீச்சு தொடங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி