4-வது விக்கெட்டுக்கு டெய்லருடன் வில்லியம்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலையாக இன்று இந்தியா பந்து வீச்சை எதிர்கொண்டது. வில்லியம்ஸ் இரண்டு ரன் எடுத்திருக்கும்போது மோகித் சர்மா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்தார். அதை தோனி பிடிக்க தவறினார். இதன் விளைவாக வில்லியம்ஸ் 50 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனைத்தொடர்ந்து டெய்லரும் அரை சதம் அடித்தார். அவருடன் எர்வின் ஜோடி சேர்ந்தார். அரை சதம் அடித்த டெய்லரின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர் பந்தை பவுண்டரிக்கும் சிக்சருக்கும் விரட்டினார். இதனால் ஜிம்பாப்வே ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. டெய்லர் 99 பந்தில் 11 பவுண்டரி, இரண்டு சிக்சருடன் சதம் அடித்தார். அதன்பின் 10 பந்தில் 38 ரன்கள் எடுத்து 138 ரன்னில் அவுட் ஆனார். அவர் மோகித் சர்மா பந்தில் தவானிடம் கேட்ச் கொடுத்தார்.
டெய்லர் அவுட் ஆகும்போது ஜிம்பாப்வே 41.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த ரசா 15 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 15 பந்தில் 28 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனதால் ஜிம்பாப்வே 48.5 ஓவரில் 287 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் சமி 9 ஓவர்கள் வீசி 48 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 9.5 ஓவர்கள் வீசி 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி