செய்திகள்,திரையுலகம் ‘புலி’ படத்தின் ரகசியத்தை கூறும் ஒளிப்பதிவாளர்!…

‘புலி’ படத்தின் ரகசியத்தை கூறும் ஒளிப்பதிவாளர்!…

‘புலி’ படத்தின் ரகசியத்தை கூறும் ஒளிப்பதிவாளர்!… post thumbnail image
சென்னை:-சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் புலி படத்தின் ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நடராஜ் இவர் சதுரங்கவேட்டை படத்தின் மூலம் கதாநாயகன் அவதாரம் எடுத்தவர். இவரிடம் புலி படத்தை பற்றி கேட்டதற்கு, இந்த படத்தில் நான் பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சி, அதோடு புலி படத்தின் கதை அருமையான கதை, படத்தில் ஏகப்பட்ட திருப்புமுனைகள் இருக்கும் இது உங்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதோடு விஜய்யின் சண்டை காட்சிகள் இந்த படத்தில் பெரிதும் பேசப்படும் அளவிற்கு இருக்கும் என்றும் விஜய் என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது நடனம் தான், தென்னிந்தியாவில் இவரை போல் மிக எளிதாக யாராலும் நடனமாட முடியாது.இந்நிலையில் தற்போது இவர் நடித்து வரும் படம் புலி. இப்படத்தில் இவருக்கு இரண்டு விதமான கதாபாத்திரம். இதுவரை இரட்டை வேட படங்களில் பெரிதாக மாற்றம் செய்யாத விஜய், இந்த படத்தில் வித்தியாசம் காட்ட குரலை மாற்றி நடிக்கப்போகிறார் என்றும் கூறுகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி