சென்னை:-‘தல’ அஜித் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர். இவர் இன்றைய தமிழ் சினிமாவின் ட்ரண்ட் செட்டர் என்றே சொல்லலாம். மங்காத்தா படத்தில் முதன் முறையாக தைரியமாக சால்ட்&பெப்பர் லுக்கிலொ நடித்தார். இந்த கெட்டப் ரசிகர்களை கவர அதை தொடர்ந்து ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால் என வரிசையாக இதே தோற்றத்தில் நடித்தார்.
இந்நிலையில் பாலிவுட் இணையத்தளம் ஒன்று சால்ட்&பெப்பர் லுக்கில் யார் அழகாக இருக்கிறார்கள் என்று ஒரு போட்டி வைத்துள்ளது. இதில் அக்ஷய் குமார், அமீர் கான், மிலன் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்லோனி மற்றும் அஜித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் அஜித்தே அதிக வாக்குகள் பெற்று தற்போது வரை முன்னணியில் இருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் அக்ஷய் குமார் இருக்கின்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி