செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் கூகுள் ஸ்ட்ரீட் வீவில் அதிகமுறை பார்க்கப்பட்ட தாஜ்மகால்!…

கூகுள் ஸ்ட்ரீட் வீவில் அதிகமுறை பார்க்கப்பட்ட தாஜ்மகால்!…

கூகுள் ஸ்ட்ரீட் வீவில் அதிகமுறை பார்க்கப்பட்ட தாஜ்மகால்!… post thumbnail image
புதுடெல்லி:-கூகுள் ஸ்ட்ரீட் வீவில் அதிகமுறை கண்டுகளிக்கப்பட்ட காதலின் நினைவு சின்னம் தாஜ்மகால் ஆசிய அளவில் 3வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இதில் ஜப்பானின் ஹசிமா தீவுகள் முதலிடத்தையும், அந்நாட்டின் ஹோனுஷு தீவுகளில் உள்ள மவுண்ட் புஜி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

ஆசிய பசிபிக் கூகுள் பிளாக் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் தாஜ்மஹால் கூகுள் ஸ்ட்ரீட் வீவில் வெளியிடப்பட்டதில் இருந்தே சுற்றுலா வாசிகளையும், வெளிநாட்டினரையும் பெருமளவில் ஈர்த்ததாக தெரியவந்துள்ளது. சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கொரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் கூகுள் ஸ்ட்ரீட் வீவில் தாஜ்மகாலை கண்டுகளித்ததாக தெரிகிறது.

தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக கம்போடியாவின் 1000 ஆண்டுகள் பழமையான அங்கோர்வாட் கோயில்கள் கண்டுகளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 100க்கும் மேற்பட்ட தேசிய நினைவு சின்னங்களை கூகுள் ஸ்ட்ரீட் வீவில் வெளியிட, கூகுள் நிறுவனமும் இந்திய தொல்லியல் ஆய்வு துறையும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி