செய்திகள்,திரையுலகம் வைல்டு கார்டு (2015) திரை விமர்சனம்…

வைல்டு கார்டு (2015) திரை விமர்சனம்…

வைல்டு கார்டு (2015) திரை விமர்சனம்… post thumbnail image
லாஸ்வேகாஸில் வசித்து வரும் படத்தின் ஹீரோ நிக் வைல்ட் (ஜேசன் ஸ்டதம்) சூதாட்டத்திற்கு அடிமையாக இருக்கிறார். தினமும் சூதாடுவதற்காகவே சிறு சிறு வேலைகளை செய்துவருகிறார். இந்நிலையில் ஒருநாள் சைரஸ் கின்னிக் (மைகேல் அங்கரானோ) என்னும் செல்வந்தர் நிக்கிற்கு ஒரு வேலை தருகிறார். தனக்கு லாஸ்வேகாஸ் முழுவதும் சுற்றிக்காட்டவும், தான் சூதாட்டத்தில் ஈடுபடும்போது தனக்கு முழு பாதுகாப்பு அளிக்கவும் நிக்கை பணியமர்த்துகிறார். அதற்காக சைரஸ், நிக்கிற்கு தேவையான சம்பளத்தையும் கொடுக்கிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒரு விடுதியில் உணவு சாப்பிடும்போது, ஹோலி (டொமினிக் கார்சியா) எனும் ஒரு பெண்ணிடமிருந்து நிக்கிற்கு ஒரு குறிப்பு வருகிறது. அந்த குறிப்பில் அன்று இரவு தனது வீட்டிற்கு வரும்படி எழுதப்பட்டிருக்கிறது.

குறிப்பில் இருந்த முகவரிக்கு செல்லும் நிக்கிடம் ஹோலி, தான் ‘தி கோல்டன் நக்கெட்’ என்னும் விடுதிக்கு சென்றிருந்த போது மூன்று பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறுகிறார். மேலும், தன்னை கொடுமைப்படுத்தியவர்கள் யாரென தெரியாததால் அவர்களை கண்டுப்பிடித்து பழிவாங்க நிக் உதவிபுரிய வேண்டும் எனவும் கேட்கிறார்.
இதையடுத்து ஹோலிக்கு உதவி செய்ய புறப்படும் நிக், ஹோலியை கொடூரமாக தாக்கியது டானி (மிலோ வெண்டிமிக்லியா) எனும் ரவுடி என்பதைக் கண்டறிகிறார். ஆனால், இவர்களது முதல் சந்திப்பே கைகலப்பில் முடிகிறது.சண்டையின் முடிவில் டானி மற்றும் அவனது ஆட்களை தாக்கும் நிக் உடனடியாக ஹோலியை அங்கு வரவைக்கிறார். சம்பவ இடத்திற்கு வரும் ஹோலி, தன்னை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய டானியின் ஆண்மையை சிதைக்கப்போவதாக மிரட்டுகிறார். இதனால் அதிர்ச்சி அடையும் டானி தன்னை மன்னித்துவிடும்படி ஹோலியிடம் கெஞ்சுகிறார். இதையடுத்து டானியிடம் இருந்து 50,000 டாலர்கள் எடுத்துக்கொள்ளும் ஹோலி அந்த பணத்தை நிக்குடன் பங்கிட்டு கொண்டு லாஸ்வேகாஸில் இருந்து வெளியேறுகிறார்.

இதையடுத்து தன்னிடம் இருந்த பணத்தை வைத்து சூதாடும் நிக் அதிக பணம் சம்பாதிக்கிறார். ஆனால், ஒருகட்டத்தில் சம்பாதித்த அனைத்து பணத்தையும் இழக்கிறார். இந்நிலையில், நிக்கை பழிவாங்க டானி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.இறுதியில் நிக், டானியிடம் இருந்து தப்பித்தாரா? சூதாட்டதில் பணத்தை இழந்தபின் அதன்பின் நிக் என்ன செய்தார்? என்பதை இயக்குனர் சைமன் வெஸ்ட் விறுவிறுப்பான திருப்பங்களுடன் பதிவு செய்திருக்கிறார்.1985 ஆம் ஆண்டு வில்லியம் கோல்ட்மான் என்பவரால் எழுதப்பட்ட ’ஹீட்’ எனும் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படம் விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லராக தயாரிக்கப்பட்டுள்ளது.படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் ஜேசன் ஸ்டதம் தனது கதாப்பாத்திரத்தில் நன்றாக பொருந்தியிருக்கிறார். படத்தின் முன்னணி கதாப்பாத்திரங்கள் மட்டுமின்றி சிறு சிறு ரோல்களில் நடித்தவர்களும் பார்வையாளர்களின் மனதில் பதிகிறார்கள். நாவலை தழுவி எடுக்கப்பட்ட க்ரைம் த்ரில்லர் படத்தில் அதிக வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஷெல்லி ஜான்சனின் ஒளிப்பதிவில் லாஸ் வேகாஸின் அழகும், சூதாட்ட நிலையங்களின் பரபரப்பும் திறம்பட காட்சியமைக்கபட்டுள்ளன.

மொத்தத்தில் ‘வைல்டு கார்டு’ ஆக்சன் சரவெடி…………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி