அத்துடன் வீட்டின் உரிமையாளரான 40 வயது நிரம்பிய வீனா லியாவின் புகைப்படமும் வெளியாகி இருந்தது. இது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அனைத்து ஊடகங்களும் அவர் வீட்டை நோக்கி படை எடுத்தன. அந்நாட்டு போலீசாரும் இது மோசடி விளம்பரமாக கருதி லியாவை அணுகினர். அப்போது இது எல்லாம் லினாவின் நண்பரான ரியல் எஸ்டேட் புரோக்கரின் வேலை என்று தெரிந்தது. போலீசாரிடம் இத்தகைய விளம்பரத்தை தான் வெளியிட கூறவில்லை என்று கூறிய லினா, தனது ரியல் எஸ்டேட் நண்பரிடம் வீட்டை விற்பது குறித்து விளம்பரப்படுத்துங்கள்.
அதே சமயம் வீட்டை வாங்க விருப்பமுள்ளவர், திருமணம் ஆகாதவராகவோ அல்லது மனைவியை இழந்தவராகவோ இருப்பதுடன், மனைவியையும் தேடுபவராக இருந்தால் தனக்கு தெரியப்படுத்துங்கள் என்று கூறியதாகவும் லினா போலீசாரிடம் தெரிவித்தார். அவ்வாறு யாராவது வீட்டை வாங்க முன்வந்தால் விதவையாக இருக்கும் தானும் அந்நபருடன் பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தாகவும் லினா கூறியுள்ளார். ஆனால் ஒரு போதும் இந்த விவரத்தை ஆன் லைனில் வெளியிடுமாறு தான் கூறவில்லை என்று லினா கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி