அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் அமெரிக்காவுக்கு இந்தியா நிர்பந்தம்!…

அமெரிக்காவுக்கு இந்தியா நிர்பந்தம்!…

அமெரிக்காவுக்கு இந்தியா நிர்பந்தம்!… post thumbnail image
புது டெல்லி:-அமெரிக்காவில் இந்திய துணை தூதராக இருந்த தேவயானி கோப்ரகடே தனது வேலைக்காரிக்கு உரிய சம்பளம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின்கீழ் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்த இந்தியா, உடனடியாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவெலை நேரில் வரவழைத்து, இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு கூறியது.

அவரை நியூயார்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகளின் நிரந்தர பணிக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கிடையில், இந்தியாவுக்கு திரும்பிய தேவயானி மத்திய வெளியுறவு துறை அமைச்சக பணியில் சேர்ந்தார். இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்றைய கேள்வி நேரத்தின்போது பதில் அளித்த மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், தேவயானி மீதான அனைத்து வகை நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் என அமெரிக்க அரசை இந்திய அரசு நிர்பந்தித்து வருவதாக குறிப்பிட்டார்.

இது தொடர்பாக இந்தியா-அமெரிக்க உயரதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட சுஷ்மா, இதுமட்டுமின்றி ராஜாங்க ரீதியாக தூதரக உறவுகளில் நிலவி வந்த பிணக்குகள் தொடர்பாகவும் பரிசீலித்து வருகின்றோம் என்றும் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி