இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு உலக கோப்பையில் 24 சதங்கள் எடுக்கப்பட்டதே அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது. அச்சாதனை இப்போது லீக் சுற்றின் போதே உடைக்கப்பட்டு விட்டது. இந்த உலக கோப்பையில் இலங்கை 6 சதங்களும், தென்ஆப்பிரிக்கா 5 சதங்களும், வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா தலா 3 சதங்களும், இந்தியா, இங்கிலாந்து தலா 2 சதங்களும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, அயர்லாந்து தலா ஒரு சதமும் சுவைத்துள்ளன. தொடர்ந்து 5 வெற்றிகளை குவித்துள்ள நியூசிலாந்து வீரர்களில் யாரும் சதம் பக்கமே நெருங்கவில்லை. ஒவ்வொரு உலக கோப்பையிலும் எடுக்கப்பட்ட சதங்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:–
1975-6 சதம், 1979-2, 1983-8, 1987-11, 1992-8, 1996-16, 1999-11, 2003-21, 2007-20, 2011-24.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி