ஹீப்ளி:-74 பயணிகள் மற்றும் 4 விமான குழுவினர் உட்பட பெங்களூரிலிருந்து புறப்பட்டு ஹீப்ளி வந்தடைந்த ஸ்பைஸ் ஜெட் எஸ்ஜி 1085 பயணிகள் விமானம் கனமழை காரணமாக ஓடுதளத்திலிருந்து விலகி பயங்கர சத்தத்துடன் சரிந்தது. உடனடியாக கர்நாடக தகவல் துறை அமைச்சர் ரோஷன் பெய்க் உட்பட விமானத்தில் பயணித்த அனைவரும் அவசரகால வழி மூலமாக வெளியேறினர்.
வெளியே பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடத்தைத் தேடி ஓடினர். முதற்கட்ட தகவலின் படி இரவு 7.15க்கு இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், பயணிகளுக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி