சென்னை:-‘வீரம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீஎண்ட்ரி கொடுத்து தற்போது ஆர்யாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் நடிகை தமன்னா. இவர் திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் போதே சில கட்டுப்பாடுகளுடன் தான் வந்துள்ளார்.
அது என்னவென்றால் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், லிப் லாக் முத்த காட்சி, பிகினி உடை அணிவது, இந்த இரண்டு மட்டும் எப்போதும் செய்யக்கூடாது என முடிவெடுத்து தான் வந்தாராம்.
இதில் ஒரு ஹிந்தி படத்தில் பிகினி உடையில் நடித்து தன் சபதத்தை மீறினார். ஆனால், ஒரு போதும் முத்த காட்சிக்கு மட்டும் இடமே கிடையாது என்று கூறிவிட்டாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி