சென்னை:-தசாவதாரம் படத்தில் நடிகர் கமல்ஹாசன் பத்து விதமான வேடங்களில் நடித்தார். ஒவ்வொரு வேடங்களுக்காகவும் நிறைய ரிஸ்க் எடுத்து ஒன்றுக்கொன்று அதிகப்படியான வித்தியாசம் காட்டும் வகையில் ஒப்பனைகள் செய்து அந்த படத்தில் நடித்தார் கமல். இந்நிலையில், தற்போது நடித்துள்ள உத்தமவில்லன் படத்தில் 8ம் நூற்றாண்டு, 21ம் நூற்றாண்டு என இரண்டுவிதமான கதைகளில், இரண்டு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் கமல்.
கடந்த 2 வருட உழைப்பிற்கு பிறகு தற்போது திரைக்கு வரத் தயாராகி உள்ளது உத்தமவில்லன். இந்த படத்தில் கமல் இரண்டு வேடங்களில் நடித்திருப்பதோடு நில்லாமல், கதை, திரைக்கதை வசனம், பாடல்கள், பின்னணி, நடிப்பு, தயாரிப்பு, இசை ஆலோசனை என மேலும் பல அவதாரங்கள் எடுத்திருக்கிறார். அந்த வகையில், இந்த உத்தமவில்லனிலும் கமல் பத்து அவதாரம் எடுத்திருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி