நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 107 பந்தில் 11 பவுண்டரியுடன் 104 ரன்கள் எடுத்தார். இதற்கு முன் இங்கிலாந்திற்கு எதிராக கடந்த மார்ச் 1-ந்தேதி நடைபெற்ற போட்டியில் 86 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 117 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். இதில் இலங்கை அணி 309 ரன்களை சேசிங் செய்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிப்ரவரி 26-ந்தேதி வங்காள தேசத்திற்கு எதிரான நடைபெற்ற போட்டியில் 76 பந்தில் 13 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 105 ரன்கள் எடுத்தார். இதில் இலங்கை அணி 332 ரன்கள் குவித்து வங்காள தேசத்தை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. சங்ககரா சதம் அடித்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இலங்கை நேற்றைய போட்டியில் தோல்வியடைந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி