டெல்லி:-டெல்லியில் இந்த ஆண்டில் கடந்த 2 மாதங்களில் 300 கற்பழிப்பு வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் பெண்களுக்கு எதிரான மானபங்கம் மற்றும் பாலியல் தொந்தரவு தொடர்பாக 500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. மருத்துவ மாணவியின் கற்பழிப்பு சம்பவத்துக்கு பின் பெண்கள் இடையே விழிப்புணர்வு அதிகமாகி இருப்பதாக டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ் பஸ்சி தெரிவித்தார். 96 சதவீதம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது அவர்களது உறவினர்கள், தெரிந்தவர்கள், நண்பர்களால்தான் என்று போலீஸ் தரப்பு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி