சூப்பர் ஸ்டார் முதல் பவர் ஸ்டார் வரை டுவிட்டரை கலக்கி வரும் நிலையில், தற்போது நடிகர் சூர்யாவும் இந்த டுவிட்டரில் இணைந்துள்ளார். https://twitter.com/Suriya_offl என்ற பெயரில் அந்த டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதுவே சூர்யாவின் அதிகாரப்பூர்வமான டுவிட்டர் தளம் என்றும் கூறப்பட்டுள்ளது. சூர்யா பெயரில் ஏற்கெனவே போலியான டுவிட்டர் கணக்கு தொடங்கி, அதன்மூலம் சூர்யா பற்றி தவறான கருத்துக்களை வெளியிடுவதாக சூர்யா தரப்பில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதுபோல் தன்னைப் பற்றி தவறான கருத்துக்கள் வெளிவந்துவிடக்கூடாது என்பதற்காக சூர்யாவே தற்போது அவருடைய பெயரில் புதிய டுவிட்டர் கணக்கை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த டுவிட்டர் கணக்கை சூர்யா தொடங்கிய சில நிமிடங்களிலேயே 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இவரது டுவிட்டர் பக்கத்தை தொடர ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டுவிட்டர் பக்கத்தில் சூர்யா இதுவரை எந்தவித டுவிட்டும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டுவிட்டரில் சூர்யா இணைந்ததை தொடர்ந்து டுவிட்டர் ரசிகர்கள் வெல்கம் சூர்யா டு டுவிட்டர் (#WelcomeSuriyaToTwitter) என்ற புதிய டிரெண்டை ஏற்படுத்தி, சூர்யாவை பிரபலமாக்கி வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி