வெங்கடாசலபதியின் தொந்தரவு பொறுக்காமல் அவர் தயாரிக்கும் தொடரில் நடிப்பதை அந்த நடிகை நிறுத்தி விட்டார். அதன் பிறகும் நடிகை செல்லும் இடங்களுக்குகெல்லாம் தயாரிப்பாளர் வெங்கடாசலபதி பின் தொடர்ந்து சென்று செக்ஸ் தொல்லை கொடுத்தார். இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போர்பண்டா அவுட் போஸ்ட் போலீஸ் நிலையத்துக்கு நடிகை சென்று தயாரிப்பாளரின் செக்ஸ் தொல்லை குறித்து கூறினார். அவரை எச்சரித்து அனுப்புமாறு தெரிவித்தார்.
ஆனால் போலீசார் புகார் கொடுங்கள் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கிறோம் என்றனர். புகார் கொடுத்தால் தனது பெயர் வெளியாகி விடும் என்பதால் நடிகை புகார் கொடுக்கவில்லை. இதனால் அப்போது போலீசார் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
அதன் பிறகும் தயாரிப்பாளர் வெங்கடாசலபதியின் செக்ஸ் தொல்லை அதிகரித்தது. சம்பவத்தன்று கோல் கொண்டா கோட்டை பகுதிக்கு நடிகை சென்றிருந்தார். அவர் அங்கு வருவதை அறிந்த தயாரிப்பாளர் வெங்கடாசலபதியும் அங்கு வந்து நடிகையிடம் ஆபாசமாக பேசினார்.இதனால் அவர் அங்கியிருந்து தனது வீட்டுக்கு சென்று விட்டார். உடனே தயாரிப்பாளரும் விடாமல் நடிகையை பின் தொடர்ந்து அவரது வீட்டுக்கே சென்று தகாத வார்த்தைகளால் பேசினார்.இதனால் மன உளைச்சல் அடைந்த நடிகை தனது கணவருடன் எஸ்.ஆர். நகர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். தயாரிப்பாளர் வெங்கடாசலபதி மீது புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தயாரிப்பாளர் வெங்கடாசலபதியை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி