லண்டன்:-தற்போது பல வழிகளில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் மனிதர்களின் சிறுநீரில் இருந்தும் மின்சாரம் தயாரிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கழிவறை இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சிறுநீரில் உள்ள நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிர் கிருமிகளின் செல்கள் மின்சாரமாக மாறுகிறது. இந்த தொழில் நுட்பத்தில் மின்சாரம் தயாரிப்பது சர்வதேச நாடுகளின் அகதிகள் முகாம்களில் உள்ள இருட்டான கழிவறையில் நடைபெறும் கற்பழிப்பு மற்றும் செக்ஸ் குற்றங்களில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி