கொழும்பு:-இலங்கையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சே படு தோல்வியைத் தழுவினார். ஈழத்தமிழர் ஆதரவுடன் மைத்ரிபால சிறிசேனா வெற்றி பெற்று புதிய ஜனாதிபதி ஆனார். அவர் ஈழத்தமிழர்கள் நலனுக்காக புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளார். இந்நிலையில் ராஜபக்சே தோல்வி காரணமாக பீதிக்குள்ளான அவரது சகோதரர்கள் கோத்தபய, பசில் இருவரும் வெளிநாட்டுக்கு சென்று விட்டனர். இவர்களில் பசில் ராஜபக்சே மிக, மிக விரக்தி அடைந்த நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
நேற்று அவர் சரணகுண வர்த்தனே எம்.பி.யுடன் போனில் பேசினார். அப்போது பசில், நான் மீண்டும் அரசியலில் ஈடுபட மாட்டேன். அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டேன் என்றார். ராஜபக்சே தலைமையிலான அரசில் பொருளாதார அபிவிருத்தித்துறை மந்திரியாக பசில் இருந்தார். கடந்த 3 ஆண்டுகளில் அவர் பல நூறு கோடி ரூபாயை ஊழல் செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை விரைவில் தொடங்க உள்ளது. இந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு பயந்தே பசில் அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி