சென்னை:-தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகைகளில் ஒருவர் நடிகை வித்யூலேகா. இவர் தொடர்ந்து முன்னணி நாயகர்களின் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் என்னை அறிந்தால் படத்துக்கு அஜித்துக்கு ஆல் த பெஸ்ட் என மெஸேஜ் அனுப்பி இருக்கிறார். அதற்கு அஜித் சமீபத்தில் பதில் அளித்ததோடு, லேட்டானதற்கு மன்னிக்கவும் எனவும் கூறியிருக்கிறார்.
இந்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் வித்யூலேகா பகிர்ந்துள்ளார். தல மேஸேஜுடன் எழுந்தேன். நான் என்னை அறிந்தால் படத்திற்கு ஆல் த பெஸ்ட் என அனுப்பியதற்கு இப்போது பதிலுடன் கூடவே மன்னிக்கவும் எனவும் அனுப்பியுள்ளார். என்ன ஒரு ஸ்டார். வாவ் என ட்விட்டரில் மெய்சிலிர்த்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி