இந்நிலையில் இளையதளபதி விஜய்யின் ரசிகர்கள் மீத்தேன் வாயு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில தினங்களுக்கு முன் தடையை மீறி ஊர்வலம் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மீத்தேன் எடுக்கப்படவுள்ள திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் உள்ள இளையதளபதி விஜய் ரசிகர்கள் போராட்டம் நடத்துவதற்கு போலீஸாரிடம் முறைப்படி அனுமதி கேட்டனர்.
ஆனால் காவல்துறையினர் அவர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடத்த முடிவு செய்த விஜய் ரசிகர்கள், கடலூர் விஜய் ரசிகர் மன்ற தலைவர் தலைமையில் கருப்பு சட்டை அணிந்தபடி மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டபடி ஊர்வலம் செல்ல போலிஸாரால் அனைவரும் கைது செய்யப்பட்டனர். ஒரு நடிகனால் மக்களிடையே இத்தனை மாற்றம் எனில் அது நல்லது தானே.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி