சென்னை:-உலக சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றால் ஜாக்கி ஜான் தான். சில வருடங்களுக்கு முன் இவருக்கு மலேசியா அரசு சமூக சேவை மற்றும் கலைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கான சிறப்பு விருது ஒன்றை கொடுத்து கௌரவித்தது. இவ்விருதை இந்தியாவில் ஷாருக்கானும் பெற்றுள்ளார். தற்போது இந்த விருதை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தரவேண்டும் என மலேசியா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்காக ஆன்லைன் மூலம் தங்கள் ஆதரவுகளை பல ரசிகர்கள் தெரிவித்து, இதை மலேசியா அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். ரஜினிக்கு இந்த விருது கிடைக்குமா?… என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி