பெர்லின்:-ஜெர்மனியில் உள்ள ஓல்டன்பர்க் நகரை சேர்ந்தவர் நியலஸ் எச். இவர் அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் ஆண் நர்சாக பணிபுரிந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய அபாயகரமான ஊசி மருந்தை உடலில் செலுத்தினார்.
இவ்வாறு 2 பேரை கொலை செய்தார். எனவே அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக இது போன்று 90 நோயாளிகளின் உயிர்களுடன் இவர் விளையாடி இருப்பது தெரிய வந்தது. அவர்களில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதை தொடர்ந்து இவர் மூலம் உயிரிழந்து புதைக்கப்பட்டவர்களின் பிணங்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அபாயகரமான ஊசி மருந்து மூலம் அவர்கள் பலியானது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நியலஸ் எச்சுக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி