அவ்வாறு இழுக்கும் போது மடோனாவின் உடலிலிருந்து அந்த கோட் நழுவியிருக்க வேண்டும். ஆனால் அந்த கோட்டை மடோனா இறுக்கமாக கட்டியிருந்ததால், அது நழுவாமல் போனதுடன் அவரும் கீழே விழ நேரிட்டது. இதனால் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. தொடர்ந்து விழா நிகழ்வில் பங்கேற்ற அவர், தனது ‘லிவிங் பார் லவ்’ என்ற பாடலை அற்புதமாக பாடியதுடன், நடனமாடியும் அசத்தினார்.
விழா முடிந்த பின் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், நான் நன்றாக உள்ளேன். எனது கேப் கோட் டைட்டாக கட்டப்பட்டிருந்தது. எனினும் எதுவும் என்னை தடுத்துவிட முடியாது. மக்களின் அன்பு என்னை தூக்கி நிறுத்தியது. உங்களது வாழ்த்துகளுக்கு நன்றி என கூறியிருந்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி