செயற்கைக் கோள்களை ஏவும் தொழில்நுட்பத்தில் சார்க் நாடுகளில் இந்தியா தலைமை இடத்தை பிடிக்கும் என தெரிவித்த அவர், நமது விண்வெளித் துறை தொழில்நுட்ப வசதிகளை பிற நாடுகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பதன் வாயிலாக இந்தியாவுக்கு வருமானம் கிடைத்து வருவதாகவும் கூறினார். இந்த துறையில் நாம் மிக துல்லியமான தொழில்நுட்ப மேம்பாட்டை எய்தியுள்ளதால் பல நாடுகளை விட நாம் முன்னோடியாக திகழ்கின்றோம். இதனால், தங்களது செயற்கைக் கோள்களை இந்தியாவில் இருந்து ஏவ நிறைய சிறிய நாடுகள் விருப்பம் காட்டி வருகின்றன. இந்தியாவின் 27 செயற்கைக் கோள்கள் தற்போது விண்வெளியில் வெற்றிகரமாக சுற்றி வந்து கொண்டுள்ளன. இவற்றில் 12 செயற்கைக் கோள்கள் பூமியை கண்காணித்து வருகின்றன. 11 செயற்கைக் கோள்கள் தொலைத்தொடர்பு இணைப்புகளை நிர்வகித்து வருகின்றன. 3 செயற்கைக் கோள்கள் திசை மற்றும் வழிகாட்டும் (நேவிகேஷனல்) சேவையாற்றுகின்றன.
மற்றொரு செயற்கைக் கோளான ’மங்கல்யான்’ செவ்வாய் கிரகத்தை சுற்றிவந்து ஆய்வு நடத்துகின்றது. மொத்தம் 27 இந்திய செயற்கைக் கோள்கள் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அடுத்த மாதம் மேலும் ஒரு செயற்கைக் கோள் ஏவப்பட உள்ளது. அடுத்தடுத்து, மேலும் பல செயற்கைக் கோள்களை ஏவும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த ஜுன் மாதம் 5 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதன் மூலம் வணிகரீதியிலான செயற்கைக் கோள்களை ஏவும் சந்தையிலும் தடம் பதித்துள்ள இந்தியா, எதிர்கால செயற்கைக் கோள் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டியுள்ளது. புயல் மற்றும் இயற்கை பேரழிவு தொடர்பாக இந்தியாவின் கணிப்புகள் அனைத்தும் துல்லியமாக அமைந்துள்ளதால் வானிலை ஆய்வுத் துறையிலும் சமீபகாலமாக இந்தியா சிறப்பிடம் வகித்து வருகின்றது என ஜித்தேந்திரா சிங் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி