இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், அஜீத்தின் ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களின் டைட்டீலை படம் திரைக்கு வரும் நேரத்தில் வெளியிட்ட நிலையில், சிவாவோ, வீரம் டைட்டீலை முன்னரே அறிவித்து விட்டார். அதேபோல் இந்த முறையும் படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போதே டைட்டீலை அறிவிக்க திட்டமிட்டிருக்கிறாராம்.
அதனால், நூற்றுக்கணக்கான டைட்டீல்களை யோசித்து இப்போது ‘அச்சமில்லை’ என்ற தலைப்பினை முடிவு செய்து வைத்திருக்கிறாராம் சிவா. அஜீத்துக்கும் இந்த டைட்டீல் ஓகேதானாம். அதனால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இந்த டைட்டீலை உறுதிப்படுத்த உள்ளாராம் டைரக்டர் சிவா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி